யார் ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம்.
1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது.
2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது.
3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது.
4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை ஒரு நாள் மாறி, அழிந்து என்னை விட்டுப் போய் விடும். அதை நான் தவிர்க்க முடியாது.
5. நான் என்னுடைய செயல்களின் வெளிபட்டுதான், என்னுடைய செயல்கள் நல்லதோ, கெட்டதோ, அதற்கு வாரிசாக போவதும் நான்தான்.
விளக்கம் :
அதாவது முதுமையை நினைத்து பார்ப்பதன் மூலமாக இளமை எனும் ஆணவம் அடங்கும். இதனால் இளம் பருவத்தில் வரும் காமம் மற்றும் அதிகப்படியான கோபத்தை அடக்கலாம், அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். நோயை நினைத்து பார்ப்பதன் மூலம் நோய்யற்ற எனும் ஆணவத்தை அடக்கலாம், அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். மரணத்தை நினைத்து பார்ப்பதான் மூலம் வாழ்வு எனும் ஆணவத்தை அடக்காலம், அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். மாற்று மற்றும் பிரிந்து போகும் தன்மை நினைத்துப் பார்ப்பது மூலம் தன்னுடையவே என்னும் ஆசை அடக்கலாம் , அல்லது சிறிதாவது குறைக்கலாம். என்னுடைய நிலைக்கு நானேதான் காரணம் தன்னுடைய செயல்கள் தான் காரணம் என்று நினைத்து பார்த்தால் கெட்ட எண்ணங்களையும், கெட்ட சொற்களையும், கெட்ட செயல்களை, அடக்கலாம் , அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம்.