காமாட்சி அம்மன் விளக்கை நம் வீடுகளில் ஏன் ஏற்றுகிறோம் என்று உங்களுக்கு தெரியுமா? அதை விளக்கும் பதிவு இது.
காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியதாக கூறப்படுகிறது .அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வத்தை எண்ணி காமாட்சி விளக்கை ஏற்றும் போது பல நன்மைகள் நமக்கு வந்து சேரும். குலதெய்வத்தின் ஆசியும் நமக்கு கிடைக்கும். சிலருக்கு குலதெய்வம் எது என்பதே தெரியாமல் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் காமாட்சி அம்மனை குலதெய்வமாக நினைத்து வழிபட்டால் நல்லது நடக்கும்.
அனைத்து தெய்வங்களின் அருளை பெறுவதற்காகத்தான் திருமணங்களில் கூட மணமகளின் கையில் காமாட்சி விளக்கை ஏந்தி வர சொல்கின்றார்கள். திருமணமாகி கணவன் வீட்டிற்கு செல்லும் மணப்பெண்ணும் முதலில் காமாட்சி விளக்கை தான் ஏற்றுவார்கள். காமாட்சி விளக்கில் குலதெய்வம் இருந்து அருள்புரிவதாக நம்புகின்றனர். மணப்பெண்களுக்கு சீர் வரிசைகளை தரும்போது காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்படும்.
சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மனை வணங்கி வருகிறார்கள். பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாக்கின்றனர். புதுமனை புகும்போது மணமக்கள் மணவறையை வலம் வரும் போதும், எல்லா இருளும் நீங்கி, ஒளிமயமான வாழ்க்கை தொடங்க வேண்டும் என்பதற்காக பக்தியுடன் ஏந்திச் செல்லப்படும் விளக்கும் காமாட்சி அம்மன் விளக்கு.