காமாட்சி விளக்கு என்பது வீட்டை ஒளியூட்டும் சிறப்பான ஒரு விஷயம். விளக்குகளில் வட்டமுகம், இரட்டை முகம் முதல் ஐந்து முகம் என பலவிதங்களில் உள்ளது. காமாட்சி விளக்கு ஏன் ஏற்றுகிறோம் என்று தெரியுமா? அதனால் என்ன நன்மைகள் நமக்கு கிடைக்கும் என்பதை பார்ப்போம்.
உலக மக்களின் தவமிருந்த கடவுள் காமாட்சி அம்மன். அவர் தவமிருந்த போது அனைத்து கடவுளும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியதாக கூறப்படுகிறது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். ஒவ்வொருவரும் தங்களுடைய குல தெய்வத்தை எண்ணி காமாட்சி விளக்கை ஏற்றும் போது பல நன்மைகள் நமக்கு வந்து சேரும்.
காமாட்சி விளக்கை அனுதினமும் ஏற்றுவதால் கிடைக்கும் பல பலன்கள் கிடைக்கும். அவை என்னவென்றால்
1. வீட்டில் அனைத்து விதத்திலும் மங்களம் உண்டாகும். குலம் தழைக்கும்.
2. கிரக தோஷங்கள் தீரும்.
3. செல்வம் செழித்து. வறுமை நீங்கும்.
4. வழக்குகள் வெற்றி அடையும்.
5. நேர்முக – மறைமுக எதிர்ப்புகள் கூட விலகும்.