தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கமணி தங்கம்தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். ஆனால் முதல்வர் ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களுக்குள் சொன்ன வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் செய்துள்ளோம்? சொல்லாத வாக்குறுதிகளில் எவற்றையெல்லாம் நிறைவேற்றி உள்ளோம் என்று பட்டியலிட்டு காட்டியும் எடப்பாடி பழனிசாமி “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்” ஆக மாறிய தன்னுடைய கூட்டத்திலே தனது கட்சிக்காரர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற மீண்டும் மீண்டும் பொய் பேசி வருகிறார்.
“காமாலைக் காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பதைப் போல அவர் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக திமுக அரசை தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் தந்த முறைகேடுகளில் திமுகவினர் தான் பலன் அடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் முறைகேடாக நடத்தப்பட்ட கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடாக வெற்றி பெற்று அதற்குத் தலைவராக வந்தவர்கள் அனைவருமே அதிமுகவினர் தான். எனவே கூட்டுறவு சங்கங்களில் மிகப்பெரிய முறைகேடுகளை அவர்கள் நடத்தி இருப்பது குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் விளக்கியுள்ளார் என்று பேசியுள்ளார்.