ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த சம்பவம் குறித்து நடிகர் வில் ஸ்மித் மீது இன்று விசாரணை நடைபெற இருப்பதாக ஆஸ்கர் அகாடமி அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஆஸ்கர் அமைப்பின் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் வில் ஸ்மித்துக்குத் தடை செய்வதா?.. உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை ஆலோசிக்க இருப்பதாக அமைப்பின் தலைவர் டேவிட் ரூபின் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென்று என்று அமைப்பு விசாரித்து வருகிறது. தன் மனைவி தொடர்பாக கருத்து தெரிவித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்த விவகாரம் தொடர்பாக ஆஸ்கர் அமைப்பில் வகித்த உறுப்பினர் பதவியை நடிகர் வில் ஸ்மித் கடந்த வாரம் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.