Categories
சினிமா

காமெடி நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு படத்திற்கு வந்த சிக்கல்…. சூடுபிடிக்கும் விவகாரம்….!!!!

முன்னணி காமெடியை நடிகராக வலம் வருபவர் நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு. அண்மை காலமாக குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கும் சுராஜ், சில திரைப்படங்களில் கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். இப்போது ஹேம்நாத் என்பவரது இயக்கத்தில் சுராஜ் நடித்திருக்கும் “ஹிகுடா” என்ற படம் வருகிற டிச..22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை பயன்படுத்தக்கூடாது எனக்கூறி கேரள பிலிம்சேம்பர் உத்தரவு பிறப்பித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது பிரபல மலையாள எழுத்தாளர் என் எஸ் மாதவன் என்பவர், “தான் ஹிகுடா என்ற பெயரில் ஒரு நாவலை எழுதி இருக்கிறேன். இதற்கிடையில் விரைவில் அந்த நாவல் படமாகவுள்ளது. தனது நாவலின் பெயரை சுராஜ் வெஞ்சாரமூடு படத்திற்கு தன் அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளனர்”  எனக்கூறி இந்த டைட்டிலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு பிலிம் சேம்பரில் புகாரளித்திருந்தார். அதன்பின் படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரபல டிரைக்டர் வேணு கூறியதாவது, “எழுத்தாளர் என்.எஸ் மாதவன் தான் எழுதிய இந்த நாவலுக்கு ஹிகுடா என பெயர் வைப்பதற்கு யாரிடமாவது அனுமதி வாங்கினாரா..? மேலும் ஹிகுடா என்பது  பிரபல கொலம்பியா கால்பந்தாட்ட கோல்கீப்பர் ஒருவரது பெயர் ஆகும். அனைவருக்கும் தெரிந்த அவருடைய பெயரை தான் மட்டும் பயன்படுத்த வேண்டும் என அவர் அடம்பிடிப்பதும், அதுதான் சரி என்பது போல கேரள பிலிம்சேம்பர் இப்படி ஒரு தடை விதித்து இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |