நடிகர் பாண்டு மறைவிற்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் பாண்டு மற்றும் அவரது மனைவி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார். இதைத்தொடர்ந்து அவரின் மறைவுக்கு நடிகர் சூரி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பக்கத்தில் மூத்த நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் பாண்டு அண்ணனின் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. வெறும் நடிகர் மட்டுமல்ல. சிறந்த ஓவியக் கலைஞர். பல நிறுவனங்களின் பெயர் பலகைகளை வடிவமைத்தவர். சிறந்த மனிதர் பிறரன்பு பண்பாளர். இவரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து திரையுலகத்தை சேர்ந்த பலரும் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.