ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் இருந்து 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் வீரபாண்டியை அடுத்துள்ள தர்மாபுரி மேற்கு தெருவில் பிரபு என்பவர் வசித்து வருகின்றார். விவசாயியான இவருக்கு முத்துசெல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துசெல்வி தனது ஸ்கூட்டரில் எஸ்.பி.எஸ். காலனி பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதனையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் அந்த மர்ம நபர்கள் முத்துசெல்வி கழுத்தில் அணிருந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழ விழுந்த முத்துசெல்வி லேசான காயங்களுடன் தப்பியுள்ளார். மேலும் இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.