இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி முதல் கட்டமாக நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டியில் விளையாடியது. இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், 2ஆவது போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 3ஆவது டி20 போட்டி மழையால் டை ஆனது.
இதனால் இந்திய அணி 1:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக நவம்பர் 25ஆம் தேதி முதல் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. அதன் பின் இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்று பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. தொடரின் முதல் ஒருநாள் போட்டி டிசம்பர் 4ஆம் தேதியும், அடுத்த இரண்டு ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 7ஆம் தேதியும், டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ஆம் தேதியும் தொடங்குகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இடம் பிடித்துள்ளனர். அதேபோல காயத்தால் டி20 உலகக் கோப்பையை தவறவிட்ட ரவீந்திர ஜடேஜாவின் பெயரும் வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பெறுவது உறுதி செய்யப்படவில்லை. இந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் முழு உடல் தகுதியுடன் இல்லை என்றும் முழங்கால் பிரச்சினை காரணமாக சுற்றுப்பயணத்தை தவறவிடுவார் என்றும் Cricbuzz இப்போது தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை அறிவிக்கும் போது, பிசிசிஐ சுற்றுப்பயணத்தில் ஜடேஜா பங்கேற்பது உடற்தகுதிக்கு உட்பட்டது என்று குறிப்பிட்டுள்ளது. எனவே “ரவீந்திர ஜடேஜாவின் இருப்பு உடற்தகுதிக்கு உட்பட்டது” என்று பிசிசிஐ அதன் அக்டோபர் 31 அன்று கூறியது.
இந்நிலையில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டிசம்பரில் வங்கதேசம் சென்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகியிருந்த ஜடேஜா இன்னும் முழுமையாக குணமடையவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவீந்திர ஜடேஜா அடுத்த மாதம் பங்களாதேஷ் சுற்றுப்பயணம் மேற்கொள்வது சந்தேகம் மற்றும் தேர்வாளர்கள் அவருக்கு மாற்றாக நியமிக்கப்படலாம். நட்சத்திர ஆல்-ரவுண்டர் முழங்கால் காயம் காரணமாக விளையாடவில்லை மற்றும் 2022 டி 20 உலகக் கோப்பையை இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2023ல் அவர் மீண்டும் வரலாம். ஜடேஜா இல்லாத பட்சத்தில், வெளியேறும் ஆனாலும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வரவில்லை. அந்த வார்த்தைக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் தேர்வுக் குழு மாற்று வீரரை நியமிக்கலாம்..