Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயத்தால் வெளியேறிய ஜடேஜா…. “இதயம் நொறுங்கியது”….. சோகத்தில் ரசிகர்கள்..!!

ஆசியக்கோப்பையில் இருந்து ஜடேஜா விலகியதால் ரசிகர்கள் மனம் உடைந்து சமூக வலைத்தளங்களில்  கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆசியக்கோப்பையில் இருந்து ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். ஆசிய கோப்பையில் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்,. பிசிசிஐ இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த செய்தியை வெளியிட்டது. இந்திய அணியில் ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜடேஜா இந்தியாவின் முக்கிய வீரர், எனவே அவர் இல்லாதது சூப்பர் ஃபோர் கட்டத்தில் அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்த செய்தியைத் தொடர்ந்து, ரசிகர்கள் மிகவும் மனம் உடைந்து ரவீந்திர ஜடேஜா விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் சோகமாக பதிவிட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும் பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல். , ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான்.

இதற்கிடையில், ரோஹித் சர்மா தலைமையிலான அணி பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங்கை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆசிய கோப்பையை வெல்லும் ஹாட் ஃபேவரிட் அணியாக இந்தியா உள்ளது. இந்தியா தனது சூப்பர் ஃபோர் தொடக்க ஆட்டத்தில், இன்று நடைபெறும் பாகிஸ்தான்-ஹாங்காங் போட்டியில் வெற்றி பெறும் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தான் ஆட்டநாயகனாக திகழ்ந்தார். அவர் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன் மற்றும் கடைசி ஓவரில் வெற்றிகரமான சிக்ஸரையும் அடித்து 17 பந்துகளில் 33 ரன்கள் அடித்தார்.. அவருக்கு உறுதுணையாக ஜடேஜாவும் பொறுப்பாக ஆடி 35 (29) ரன்கள் குவித்தார். ஹாங்காங் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில், சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் அசத்தினார். அந்த ஆட்டத்தில் விராட் கோலியும் அரைசதம் அடித்து பார்முக்கு  திரும்பியது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/mm52943393/status/1565679028488380416

Categories

Tech |