Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காயத்துடன் மயங்கி கிடந்த குரங்கு…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. மருத்துவர்களின் தீவிர சிகிச்சை…!!

காலில் பலத்த காயத்துடன் மயங்கி கிடந்த குரங்குக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊஞ்சலூர் காசிபாளையம் தொடக்கப் பள்ளி அருகில் காயத்துடன் குரங்கு ஒன்று மயங்கி கிடந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மயங்கிய நிலையில் கிடந்த குரங்கை மீட்டு கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் பரிசோதித்து பார்த்தபோது, குரங்கின் காலில் முயலுக்கு வைக்கப்படும் கண்ணி ஒயர் இறுகிய நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது. அதன்பின் மருத்துவர்கள் அதனை அகற்றி குரங்குக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மயக்கம் தெளிந்த குரங்கிற்கு மருத்துவர்கள் பழம், தண்ணீர் போன்றவற்றை கொடுத்துள்ளனர்.

Categories

Tech |