Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

காயம் ஏற்படுவது சகஜம்….. ஷமி குறித்து கேப்டன் ரோஹித் சர்மாவின் பதில் என்ன?

பும்ராவுக்குப் பதிலாக ஷமி இந்திய அணியில் இடம்பிடித்தது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்..

இந்திய அணி தனது டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் அக்டோபர் 23 அன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியா (அக்டோபர் 17) மற்றும் நியூசிலாந்து (அக்டோபர் 19) ஆகிய இரு அணிகளுக்கு எதிரான பயிற்சி ஆட்டங்களிலும் விளையாடுகிறது. இதற்கிடையே வெள்ளிக்கிழமை, அணியில் தனது இறுதி மாற்றத்தை அறிவித்தது, 15 பேர் கொண்ட அணியில் காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். முதுகில் ஏற்பட்ட காயத்தால் பும்ரா உலகக்கோப்பை போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முந்தைய ஆண்டு டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ஷமி இந்தியாவுக்காக டி20 போட்டியில் விளையாடவில்லை. ஆனால் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பாக பந்து வீசியிருந்தார். குஜராத் கோப்பையை வென்றதற்கு இவரும் ஒரு முக்கிய காரணம்.. இதையடுத்து கடந்த மாதம் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய டி20 அணிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு 2 தொடர்களையும் இழக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவர் குணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் ஆஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முன்பு தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) பயிற்சி செய்தார்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் அனைத்து 16 அணிகளின் பங்கேற்கும் கேப்டன்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது.. அப்போது செய்தியாளர் சந்திப்பில், உலகக் கோப்பையில் பும்ராவுக்குப் பதிலாக காத்திருப்பு வீரராக இருந்த ஷமி  குறித்து இந்தியாவின் ரோஹித் சர்மாவிடம் கேட்கப்பட்டது.

அப்போது ரோஹித் சர்மா கூறியதாவது, காயங்கள் விளையாட்டின் ஒரு பகுதியாகும். இதில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. இவ்வளவு நிறைய விளையாட்டுகளை விளையாடினால் காயம் ஏற்படும். எங்கள் கவனம் அணியை  வலிமையை மேம்படுத்துவதில் உள்ளது. அதனால்தான் நாங்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறோம் என்பதை நீங்கள் பார்க்கிறீர்கள். காயமடைந்த ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதிலாக முகமது ஷமி பெயரிடப்பட்டார், மேலும் ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரும் வெள்ளிக்கிழமையன்று காத்திருப்பு வீரர்களாக  பெயரிடப்பட்டனர். பிரிஸ்பேனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பயிற்சி அமர்வின் போது ஷமியைப் பார்ப்பேன் என்று நம்புவதாக கூறினார்.

மேலும் முகமது ஷமியின் பவுலிங்கை இன்னும் நான் பார்க்கவில்லை.. முகமது ஷமியைப் பொறுத்த வரையில், அவருக்கு முதலில் கோவிட் வந்தது, ஷமி 2-3 வாரங்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் தனது வீட்டில் இருந்தார். அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு (NCA) அழைக்கப்பட்டார். கடந்த பத்து நாட்களாக என்.சி.ஏ.வில் கடுமையாக பயிற்சி எடுத்து வந்தார். இறுதியாக, அவர் பிரிஸ்பேனில் இருக்கிறார். பிரிஸ்பேன் அங்கு பயிற்சி நடைபெறுவதால் இந்திய அணி விரைவில் அங்கு சென்றடையும். அவர் அணியுடன் இணைந்து பயிற்சி மேற்கொள்வார் ஷமியுடன் எல்லாம் நன்றாகவே நடக்கிறதுஎன்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், காயமடைந்தவர்களைப் பற்றி சிந்திப்பதை விட,  இருக்கும் அணியை  சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும். அதில் ஏமாற்றமடைவதில் அர்த்தமில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். இங்கு (ஆஸ்திரேலியா) சீக்கிரம் வருவது ஒரு மனப்பூர்வமான முயற்சி, நாங்கள் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினோம், இன்னும் இரண்டு விளையாடுவோம். அக்டோபர் 23-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஆட்டத்திற்கு முன்பாக நாங்கள் முழுமையாக தயாராகி விடுவோம். கடைசி நிமிடத்தில் எந்த முடிவும் எடுக்கப்பட மாட்டோம். சம்பந்தப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

 

 

 

Categories

Tech |