காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆடம் மில்னே விலகியுள்ளார்.
20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே இடம் பெற்றிருந்தார். அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் விளையாடிய போது தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து காயம் குணமடையாததால் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகியுள்ளார். சிஎஸ்கே அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு உள்ளார்.