தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றார். அப்போது 5 பேர் சேர்ந்து அவரை காரை நோக்கித் தள்ளியதில் அவருடைய இடது காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மம்தா பானர்ஜி டிஸ்சார்ஜ் ஆகி இன்று சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதையடுத்து பிரச்சாரத்தில் பேசிய அவர், “காயம்பட்ட புலி மிகவும் ஆபத்தானது. மேற்குவங்கத்துக்கு எதிரான அனைத்து சதிகளையும் முறியடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.