Categories
தேசிய செய்திகள்

காய்கறிகளின் விலை உயர்வு – மேலும் உயரும் என வியாபாரிகள் தகவல்

கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொடர் மழை மற்றும் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் காய்கறிகளின் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி மாதம் முடிந்தும் காய்கறிகளின் விலை குறைவு என எதிர்பார்த்த நிலையில் கடந்த சில தினங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. வெங்காயம் தக்காளி கேரட் பீட்ரூட் பீன்ஸ் உள்ளிட்ட காய்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக வெங்காயம் கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.

கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவு காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து காணப்படுவதால் வரும் நாட்களில் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அருகில் இருக்கும் சிறு கடைகளில் காய்கறிகளின் விலையை ஒப்பிடுகையில் கோயம்பேடு சந்தையில் விலை குறைவாக இருப்பதாகக் கூறும் பொதுமக்கள் மழைக்காலம் என்பதால் வியாபாரிகளையும் குறைகூற முடியாது என தெரிவித்தனர்.

Categories

Tech |