தினம்தோறும் சமையலுக்கு நாம் பயன்படுத்தும் காய்கறிகளை எப்படி தரம் பார்த்து வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவில் அதிகம் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அவ்வாறு பல்வேறு சத்துக்களை நிறைந்த காய்கறிகளை வாங்கும் போது மிகுந்த கவனத்துடன் வாங்க வேண்டும். காய்கறிகளை எப்படி வாங்க வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
காலிஃப்ளவர்: பூக்கள் இடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்க வேண்டும்.
புடலங்காய்: கெட்டியாக வாங்கவும். அப்போது தான் விதைப்பகுதி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்.
சேப்பங்கிழங்கு: முளை விட்டது போல் ஒரு முறை நீட்டி இருக்கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார்த்து வாங்க வேண்டும்.
பீர்க்கங்காய்: அடிப்பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுவதும் ஒரே அளவில் இருக்குமாறு பார்த்து வாங்குவது நல்லது.
உருளைக்கிழங்கு: தழும்புகள் ஓட்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
முருங்கைக்காய்: கரும்பச்சை நிறத்திலும் சற்று உருண்டையாகவும் இருக்கும் முருங்கைக்காயை பார்த்து வாங்க வேண்டும்.
முள்ளங்கி: காய் நீண்டு தலைப்பகுதி காம்பு நிறம் மாறி வாடி விடாமல் பச்சையாக இருக்க வேண்டும்.
பீன்ஸ்: நல்ல பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். உடைத்தால் பட்டென்று உடையும்.
கத்தரிக்காய்: சிறு ஓடைகள் கூட இல்லாமல் நன்றாக பார்த்து வாங்க வேண்டும். தாய் முழுக்க ஒரே நிறத்தில் பளபளவென்று இருந்தால் நல்ல காய் என்று அர்த்தம்.
வாழைக்காய்: காம்பு ஓட் இந்த இடத்தில் வெள்ளையாக இருக்கிறதா என்று பார்த்து வாங்குவது நல்லது.
வெண்டைக்காய்: பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். உடைத்தால் பட்டென்று உடைய வேண்டும்.
முட்டைக்கோஸ்: இலைகள் வெள்ளையாக இருக்க கூடாது. பச்சை உள்ளவையாக பார்த்து வாங்க வேண்டும்.
அவரைக்காய்: காயை தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்களை வாங்க வேண்டாம்.