உங்கள் வீட்டில் உள்ள காய்கறிகள் கெடாமல் இருக்க சில சமையல் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நம் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவள் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக உணவுகளைச் அமைப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதில் பயன்படுத்தப்படும் காய்கறிகள் சில விரைவில் கெட்டுப் போகும். உங்கள் சமையலுக்காக சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
நறுக்கிய வாழைக்காயை தண்ணீரிலேயே போட்டு வைத்தால் நாலைந்து நாட்களுக்கு கிடையாது. தக்காளி பழங்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் கவிழ்த்து வைத்தால் அதிக நாள் கெடாமல் இருக்கும். பச்சை மிளகாய் ஒரு வாரம் வரை கெட்டுப் போகாமல் இருக்க, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து காற்று புகாமல் இருக்கி மூடவும். வெங்காயத்தை நைலான் நூலால் பின்னப்பட்ட பையில் போட்டு காற்றோட்டமாக கட்டித் தொங்கவிட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.