காய்கறி மற்றும் மளிகை கடையில் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் , சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதற்கு ஒரே தீர்வாக, பொது மக்கள் அனைவரிடமும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்பதே.
அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் சென்று வரும் பகுதிகளில் இருக்கக் கூடியவர்களுக்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள அனைத்து மளிகை, காய்கறி கடைகளிலும் வேலை செய்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் குடியிருப்பு அதிகமுள்ள பகுதி, முதியோர் இல்லம் குடிசைவாழ் பகுதி போன்றவற்றிலும் பரிசோதனை மையங்கள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.