Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காய்கறி வரத்து அதிகரிப்பால்… உழவர்சந்தையில் விலைகள் சரிவு… 6 லட்சத்திற்கு விற்பனை…!!

உழவர் சந்தையில் நடைபெற்ற காய்கறி விற்பனையில் 6 லட்சத்திற்கு விற்பனையானதால் விவிசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் கோட்டை சாலையில் ஒருநாள் விட்டு ஒருநாள் உழவர் சந்தை செயல்படுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக 50% விவசாயிகள் மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த 17½ டன் காய்கறிகள், 2 டன் பழங்கள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்துள்ளனர். மேலும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி நேற்றைய நிலவரப்படி தக்காளி ஒரு கிலோவிற்கு 36 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 48 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 25 ரூபாய்க்கும், கேரட் 68 ரூபாய்க்கும், பீன்ஸ் 64 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 52 ரூபாய்க்கும், புடலங்காய் 28 ரூபாய்க்கும், முட்டைகோஸ் 36 ரூபாய்க்கும், இஞ்சி 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 6,58,340 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |