Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

காய்சலால் பாதிக்கப்பட்ட மாணவன் கூறிய தகவல்…. தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாலக்கரையில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் 35 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மாணவனை பெற்றோர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் பள்ளியில் கழிப்பறையை சுத்தம் செய்த போது கொசு கடித்ததாக மாணவன் டாக்டரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் இதுகுறித்து விசாரணை நடத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று பெருந்துறை கல்வி மாவட்ட அலுவலர் தேவி சந்திரா, உதவி கல்வி அலுவலர் தனபாக்கியம் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்திய போது மாணவர்களை தலைமை ஆசிரியை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்தது உறுதியானது. இதுகுறித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கல்வி அதிகாரிகள் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |