காய்ச்சல் காரணமாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பருவமழை தொடங்க இருக்கின்ற நிலையில் டெங்கு மற்றும் இன்புளுயன்சா காய்ச்சலால் குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.