செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை. மருந்து தட்டுப்பாடு இருப்பது போன்ற மாய தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 965 பேருக்கு இன்ப்ளுயன்சா காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லாததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான அவசியம் இல்லை. மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தால் அவர்களை ஆசிரியர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்” என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாராமகவே தமிழகத்தில் குழந்தைகள் பலரும் ப்ளு காயச்சலால் பாதிக்கபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.