காய்ச்சல் ஏற்படும் போது இந்த வெற்றியை ரசத்தை நாம் செய்து சாப்பிட்டால் உடம்பிற்கு மிகவும் நல்லது.
தேவையானவை:.
வெற்றிலை – 6, தக்காளி – 2, உப்பு – தேவையான அளவு, மிளகுத்தூள் – 1 டீஸ்பூன், சீரகத்தூள் – 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை.
தாளிக்க: நெய் – 1 டீஸ்பூன், சீரகம் – 1 சிட்டிகை.
செய்முறை:.
தக்காளியை நறுக்கி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். லேசாகக் கொதி வரும்போது வெற்றிலையை அரைத்து வடிகட்டிச் சாறு எடுத்துக் கலவையில் சேர்த்துத் தாளிக்கக் வேண்டியதை தாளித்து சேர்த்தால், வெற்றிலை ரசம் ரெடி.