மீன் ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்:
சீலா மீன் – 1/2 கிலோ நல்லெண்ணெய் -500 மில்லி மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
பூண்டு – 10 பல்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவைக்கேற்ப
வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன்
மீன் ஊறுகாய் பொரிப்பதற்கு தேவையானவை:
கடுகு – அரை டீஸ்பூன்
வெந்தயம் – கால் டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 3
இவை அனைத்தையும் வாணலியில் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து பொடித்து கொள்ளவும்.
செய்முறை
மீனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக்கி அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள், வினிகர் சேர்த்து பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, விரவி வைத்திருக்கும் மீன் துண்டுகளை போட்டு முறுவலாக பொரித்து எடுக்கவும்.
பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து, பொரித்து வைத்துள்ள மீன் துண்டுகளைப் போட்டு கிளறி, பொடித்து வைத்திருக்கும் பொருட்களையும் சேர்த்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
இப்பொழுது சுவையான மீன் ஊறுகாய் ரெடி. ஆறியப்பின் பாட்டிலில் அடைத்து வைக்கலாம்.