Categories
உலக செய்திகள்

காரமான உணவை சாப்பிட்டு கடுமையான இருமல்… பெண்ணின் விலா எலும்பு முறிவு… ஏன் தெரியுமா…? பிரபல நாட்டில் அதிர்ச்சி சம்பவம்…!!!!!!

சீனாவில் காரமான உணவு சாப்பிட்டு இளம்பெண் ஒருவர் எலும்புகளை உடைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் ஹூவாங் என்ற பெண் வசித்து வருகிறார். இவர்  காரமான உணவை உண்டவுடன் கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. அப்போது அந்தப் பெண்ணின் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது. ஆனால் அவர் அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது  நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார். அதன் பின் அவர் மருத்துவரை பார்க்க சென்றுள்ளார். அப்போது சி.டி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு 4 விலா எலும்புகள் உடைந்தது தெரியவந்துள்ளது.

அதாவது மருத்துவ அறிக்கையின் படி, பெண்ணின் விலா எலும்புகள் உடைந்ததற்கு அடிப்படை காரணம் அவரது ஆரோக்கியமற்ற குறைந்த உடல் எடை தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது மேல் உடல் மிகவும்  மெல்லியதாக அதாவது விலா எலும்புகள் தெரியும் அளவிற்கு ஒல்லியாக இருந்துள்ளார். இது குறித்து மருத்துவர் கூறியதாவது, உங்கள் தோலை தாண்டி விலா  எலும்புகள் தெளிவாக வெளியே காணப்படுகிறது. எலும்பை தாங்கும் தசைகள் எதுவும் இல்லை. அதனால் இருமலின் போது உங்களின் விலா எலும்புகள் எளிதில் முறிந்து விடும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் எலும்பு முறிவு பாதிப்பில் இருந்து அந்தப் பெண் மீண்டு தன்னுடைய தசை மற்றும் மேல் உடை எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |