Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காரம் இல்லாமல்… சுவையில் மிகுந்த… குடைமிளகாய் சாம்பார்…!!!

குடைமிளகாய்                                   – 3
சாம்பார் பொடி                                 – 3/4 டேபிள்ஸ்பூன்
வெங்காயம், தக்காளி                   – தலா 1
எண்ணெய்                                          – 2 டீஸ்பூன்
கடுகு                                                      – 1 1/2 டீஸ்பூன்
பெருங்காயம்                                    – 1/2 டீஸ்பூன்
புளி பேஸ்ட்                                          – 1/2 டீஸ்பூன்
துவரம் பருப்பு                                   – 1 கப்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
காய்ந்த மிளகாய்                            – 5
உப்பு                                                       – தேவையான அளவு
நெய்                                                       – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் துவரம் பருப்பை நன்றாக வேகவைத்து எடுக்கவும். பின் வெங்காயம், தக்காளி, குடைமிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பின்பு 1 1/2 கப் தண்ணீரில் புளி, சாம்பார் பொடி இரண்டையும் நன்றாக கரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து , அதனுடன் வெங்காயம், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

அடுத்து அதில் நறுக்கிய குடைமிளகாய், கரைத்து வைத்துள்ள புளி, சாம்பார் பொடி கரைசலையும் ஊற்றி, வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

அதனை தொடர்ந்து வேகவைத்த துவரம் பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 1 நிமிடம் கொதிக்க விடவும். இறுதியில் கொத்தமல்லி மற்றும் 1 டீஸ்பூன் நெய் சேர்த்தால் சுவை மற்றும் வாசனை அதிகரிக்கும். இப்போது சூப்பரான குடைமிளகாய் சாம்பார் ரெடி.

Categories

Tech |