பச்சை மிளகாய் பச்சடி செய்ய தேவையான பொருள்கள்:
பச்சைமிளகாய் – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
தனியா தூள் – 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
வெல்லம் – 4 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
தேங்காய் துருவல் – 5 மேஜைக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய் – 4 மேஜைக்கரண்டி
கடுகு – 1 மேஜைக்கரண்டி
உளுந்தம் பருப்பு – 1/2 மேஜைக்கரண்டி
செய்முறை:
முதலில் பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். பின்பு சிறிய பாத்திரத்தில் புளியை எடுத்து, தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு கரைத்து கொள்ளவும்.
பிறகு தேங்காயை எடுத்து துண்டுகளாக நறுக்கி மிக்ஸிஜாரில் போட்டு உதிரியாக அரைத்து எடுக்கவும். பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்ததும் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு நன்கு வேகும் வரை வதக்கவும்.
மேலும் வதங்கிய கலவையில், கரைத்த புளித்தண்ணீர், தனியா பொடி, மஞ்சள்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.
பின்பு அதில் அரைத்த தேங்காய் கலவையை சேர்த்து நன்கு கெட்டியானதும் இறக்கி வைத்து பரிமாறினால், அருமையான ருசியில் பச்சை மிளகாய் பச்சடி ரெடி. மேலும் அதில் காரம் அதிகஅளவு இருந்தால், கூடுதலான அளவு வெல்லத்தூள் சேர்த்து கொள்ளவும்.