காரின் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிவபுரம் கிராமத்தில் ரஞ்சித் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று குமாரகோவில் விளக்கு சாலையில் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அருள் என்பவர் ஓட்டி வந்த லாரி நிலைதடுமாறி ரஞ்சித்தின் காரின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ரஞ்சித்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.