ஆவின் மற்றும் அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் 3 கோடி ரூ வரை மோசடி செய்ததாக பால்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினர் நவ.15-ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டில் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு டிச.17-ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து குற்றப்பிரிவு காவல்துறையினர் 8 தனிப் படைகள் அமைத்து அவரை வலைவீசி தேடி வந்தன.
இந்நிலையில் கர்நாடகாவில் பதுங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சற்றுமுன் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். 3 கோடி பண ரூபாய் பண மோசடி செய்த வழக்கில் 2 வாரங்களுக்கு மேல் காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்து தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் பிடிக்க சென்றபோது காரில் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் காவல்துறையினர் காரை சேசிங் செய்து அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.