சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் பகுதியில் இளங்கோவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நானும் தலைவாசல் பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேலத்தில் இருக்கும் ஒரு ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளோம்.
சேலத்தில் இருந்தால் எங்களை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் இருவரும் ஊட்டி செல்ல முடிவு எடுத்தோம். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட காரில் புறப்பட தயாராகினோம். அப்போது திடீரென வந்த நான்கு பேர் என்னை தாக்கி விட்டு எனது மனைவியை கடத்தி சென்றனர். எனவே எனது மனைவியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.