உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் ராமநாதன் தலைமை யிலான பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் சீனிவாசன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பணத்தை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலர் சுந்தரபாலிடம் ஒப்படைத்து விட்டனர்.