கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தன் காரில் சாய்ந்ததாக 6 வயது சிறுவனை இளைஞர் ஒருவர் நெஞ்சில் எட்டி உதைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணையை துவங்கிய காவல்துறையினர் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 20-வயது இளைஞரை கைதுசெய்தனர்.
அதன்பின் விசாரணையில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பணக்கார குடும்பத்தை சேர்ந்த முகமது ஷேஜாத் என்ற இளைஞர்தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனிடையில் இளைஞரின் தாக்குதலில் காயமடைந்த சிறுவன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகிறான்.