Categories
தேசிய செய்திகள்

காரில் முன் பக்கம்…. அமர்ந்து பயணம் செய்பவர்களுக்கு…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!

காரில் முன் பக்கம் அமர்ந்து பயணம் செய்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் மத்திய மந்திரி என்று கூறியுள்ளார்.

காரில் டிரைவருடன் அமர்ந்து பயணம் செய்பவர்கள் மற்றும் பின்னிருக்கையில் இருமுனைகளிலும் பயணிப்பவர்கள் இரண்டு பேர் என சீட் பெல்ட் அணிய வேண்டும். இனி பின் இருக்கையில் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.
அது மட்டுமல்ல பெரும்பாலான கார்களில் ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’ பயன்படுத்தப்படுகிறது.  மேலும் விமானத்தில் பயன்படுத்துவது போன்ற ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவ ‘சீட் பெல்ட்’தான் அனைத்து இருக்கைகளிலும் பொருத்த வேண்டும்.

இதனால் ‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’, ‘2 பாயிண்ட் சீட் பெல்ட்’டை விட மிகவும் பாதுகாப்பானது. இதை அணிகின்றபோது உடல் முழுவதும் அசையாமல் ‘பெல்ட்’ பிடித்துக்கொள்ளும்.  மேலும் விபத்து நேர்ந்தால் படுகாயம் ஏற்படாது. அந்த ‘3 பாயிண்ட் பெல்ட்’ வசதியை காரில் ஏற்படுத்துவதை கட்டாயமாக்கும் அறிவிப்பை மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘காரில் முன்பக்கம் பார்த்து பயணிக்கிற அனைத்து பயணிகளுக்கும் ‘3 பாயிண்ட் சீட் பெல்ட்’டுகளை வாகன உற்பத்தியாளர்கள் வழங்குவதை கட்டாயமாக்கும் கோப்பில் கையெழுத்து போட்டுள்ளேன்’’ என குறிப்பிட்டார். இந்த புதிய விதி எப்போது அமலுக்கு வரும் என்பதை மந்திரி நிதின் கட்காரி குறிப்பிடவில்லை.

Categories

Tech |