Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரில் மோதிய லாரி…. அதிர்ஷ்டவசமாக தப்பிய ஐஏஎஸ் அதிகாரி….!!

ஐஏஎஸ் அதிகாரி காரின் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டம் கோயம்பேடு பகுதியில் வசித்து வருபவர் நந்தகோபால். ஐ.ஏ.எஸ்.அதிகாரியான இவர் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர்  நேற்று இரவு கோயம்பேடு 100 அடி (30 மீ) உள்வட்ட சாலையில் (ஜவஹர்லால் நேரு சாலை) SAF கேம்ஸ் கிராமத்திற்கும் கோயம்பேடு காய்கறி சந்தைக்கும் இடையே அமைந்துள்ள சாலை வழியாக காரில் சென்று கொண்டிருந்தார்.  அவரது காரை புரசைவாக்கம் பெருமாள்பேட்டை நாயக்கன் தெருவில் வசித்து  வரும் பன்னீர் செல்வம் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் 100 அடி சாலை சந்திப்பு  அருகே சென்ற போது, எதிரே  சிமெண்ட் கலவை ஏற்றி வந்த லாரி  நந்தகோபால் சென்ற கார் மீது  மோதியது. அந்த  காரின் முன்பகுதி மற்றும் கண்ணாடி சேதம் அடைந்த நிலையில், காரில் உள்ளே  இருந்த நந்தகோபால் அதிர்ஷ்டவசமாக காயமுமின்றி உயிர் தப்பினார். இந்த  சம்பவம் பற்றி கார் ஓட்டுனர் பன்னீர் செல்வம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர்  அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விபத்துக்கு  ஏற்பட காரணமான லாரி டிரைவர் விமல்சந்திரன் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |