Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காருக்குள்ளே பிணமாக கிடந்த என்ஜினியர்…… என்ன காரணமாக இருக்கும்?….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை தில்லைமுல்லைவாயல் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனது தாயாருடன் அமுல் சத்தியசீலன்(38) வசித்து வருகிறார். என்ஜினியரா இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை புரிந்து வருகிறார். இவரது மனைவி வந்தனா. இந்த தம்பதியினருக்கு 8 வயதில் கெவின் என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கலைஞர் 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். அதன் பிறகு வந்தனா தனது மகனுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் அமுல் சத்தியசீலன் சர்வீசுக்கு விட்டிருந்த தனது காரை எடுத்துவிட்டு வருவதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு திருமுல்லைவாயில் சிடிஎச் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த மதுக்கடைக்கு சென்று மது பாட்டில்கள் வாங்கி வந்த அவர் காருக்குள் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் நேற்று முன் தினம் இரவு 11 மணி ஆகியும் அவரது கார் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மது கடை ஊழியர்கள் திருமுல்லைவாயில் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கார் கதவை திறக்க முயற்சித்தனர். ஆனால் கதவை திறக்க முடியவில்லை. இதனையடுத்து போலீசார் கார் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது காருக்குள்ளே அமுல் சத்தியசீலன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகிலே மதுபாடில்களும் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அமுல் சத்தியசீலனின் சாவுக்கு காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |