இம்ரான் கான் மனைவியின் மகன் காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தற்போது பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறார். மேலும் பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான்கான் ரஷ்ய அதிபரை சந்திக்க ரஷ்யா சென்றுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் மகன் மூஸா மேனகா தனது காரில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மூஸா பாகிஸ்தான் நாட்டு முதல் பெண்மணி புஷ்ரா பீவியின் மகன் ஆவார். மேலும் புஷ்ரா பீவி, இம்ரான் கானை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தனது முன்னாள் கணவருடன் இணைந்து மூஸாவை பெற்றெடுத்துள்ளார். தற்போது மூஸா கைது செய்யப்பட்ட அதே நாளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.