கொத்தனார் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாட்டவயல் அருகே நூல்புழா பகுதியில் சாலையோரத்தில் நீண்ட நேரமாக ஒரு கார் நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் காரை திறந்து பார்த்துள்ளனர். அப்போது ஒருவர் பிணமாக காருக்குள் கிடந்துள்ளார்.
உடனே காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சுல்தான் பத்தேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மஞ்சூர் பகுதியைச் சேர்ந்த டேவிட் என்பதும் இவர் கொத்தனாராக வேலைப்பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.