காருக்குள் சிக்கி தவித்த 1 1/2 வயது ஆண் குழந்தையை 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய பாலாஜி என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நேற்று முன்தினம் பாலாஜி வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் நேரு என்பவர் தனது காரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அந்த காருக்குள் பாலாஜி ஏறி விளையாடி கொண்டிருந்தான்.
இதனை கவனிக்காமல் நேரு சாவியை உள்ளே வைத்து கார் கதவை பூட்டி சென்றுள்ளார். இதற்கிடையில் குழந்தையை தேடி அலைந்த பெற்றோர் காருக்குள் பாலாஜி அழுது கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். ஆனால் கார் கதவை திறக்க முடியவில்லை. பின்னர் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு நேரு கார் கதவை லாவகமாக திறந்தனர். பின்னர் பாலாஜியை பத்திரமாக மீட்டனர்.