Categories
உலக செய்திகள்

காருக்குள் விஷப் பாம்பு… “தப்பிக்க வழியில்லை”… கடித்த பின் சண்டை போட்டுகொண்டு 100 கிமீ வேகத்தில் சென்ற நபர்… பின் நடந்தது என்ன?

காரில் சென்று கொண்டிருந்த சமயம் தன்னைக் கடித்த விஷப்பாம்புடன் இளைஞர் போராடி மீண்டுள்ளார்

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து நகரில் நெடும்சாலையில் 27 வயதுள்ள ஒரு இளைஞர் காரில் சென்றபோது அந்தக் காரில் அதிக விஷம் நிறைந்த பாம்பு ஒன்று அந்த இளைஞரை கடித்துள்ளது. உடனே அந்த இளைஞர் சுதாரித்துக்கொண்டு வெளிவர முயற்சி செய்துள்ளார். ஆனால் பாம்பு  அவரின் காலை சுற்றி வளைத்து அவர் உட்கார்ந்திருந்த சீட்டையும் தாக்கி உள்ளது. எனவே அவருக்கு வாகனத்தை நிறுத்தவும் வழியில்லை தப்பிக்கவும் வழியில்லை.  இதனால் அவர் வைத்திருந்த கத்தி மாற்றும் சீட் பெல்ட் உதவியுடன் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற காரில் பாம்புடன் சண்டையிட்டு போராடியுள்ளார்.

அவரது வேகத்தை பார்த்த காவலர்கள் அவரை சுற்றி வளைத்து காரை நிறுத்தி உள்ளனர். காவலர்களிடம் நடந்த அனைத்தையும் கூறி, மருத்துவமனைக்குத்தான் இவ்வளவு வேகமாக சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். பின்னர் காவலர்கள் அவருக்கு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்தனர். அதன்பிறகு காவலர்கள் காரை சோதனை மேற்கொண்ட போது பாம்பு காரின் பின்பகுதியில் இருந்ததை கண்டறிந்தனர். இது தொடர்பான வீடியோ ஒன்றை குயின்ஸ்லாந்து போலீஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |