Categories
மாநில செய்திகள்

காருக்கு பெட்ரோல் போட சொன்னா இப்படி பண்ணி வச்சிருக்காங்க?… ஷாக்கான ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு….!!!!

கோவை சித்தா புதூர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அப்பகுதிகளில் ஓடி வருகிறது. அந்த கார் ஓட்டுநராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியிலுள்ள கோகோ cbe city எனும் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோலை ரூ. 4,119-க்கு போட்டுள்ளார்.

இதையடுத்து ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் போது இந்த கார் பாதி வழியில் நின்றுள்ளது. இதனால் அங்கு இருந்த மெக்கானிக்கை அழைத்து காரை சோதித்த போது பெட்ரோல் டேங்க முழுதும் தண்ணீர் இருந்துள்ளது. இதை பார்த்த ஓட்டுநர் ரமேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனே பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதில் தண்ணீர் இருந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதில் தரவில்லை.

அதன்பின் ரமேஷ் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார். இதனிடையில் இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் நந்தகோபால், இந்தியன் ஆயில் பொறியாளர்களிடம் பேசிள்ளோம். அவர்கள் வந்த பின் பெட்ரோல் பம்ப் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அந்த பெட்ரோல் பங்கில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |