Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“காரைக்கால்-பெங்களூரு ரயிலை மீண்டும் இயக்குமாறு கோரிக்கை விடுத்த பயணிகள்”…!!!!

காரைக்கால் – பெங்களூர் செல்லும் ரயிலை மீண்டும் இயக்க பயணிகள் ரயில்வே அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன சேலம் வழியாக காரைக்கால்-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில், விருத்தாச்சலம்-சேலம் ரயில்கள் 2 இயக்கப்பட்டு வந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஊழியர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் பயன்படும் வகையில் இருந்தது.

இந்நிலையில் கொரோனா தொற்றின் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் ஒரு ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான நடவடிக்கையை விரைவில் எடுக்கக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |