Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

காரைக்குடியில் திருவிழாவை முன்னிட்டு… அக்னிச்சட்டி தயாரிப்பு பணி தீவிரம்..!!

சிவகங்கை காரைக்குடி பகுதியில் கோவில்களில் திருவிழாவை முன்னிட்டு அக்னி சட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், திருப்புவனம் மாரியம்மன் கோவில் என பல்வேறு கோவில்களில் விழாக்கள் தொடங்கியுள்ளது. இதில் திருப்புவனம் மற்றும் காரைக்குடியில் கோவில்களில் விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து தாயமங்கலம் கோவிலில் திருவிழா தொடங்க உள்ளது. இதனால் அக்னி சட்டி உள்ளிட்டவை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த அக்னிச் சட்டிகளை பொறுத்தவரை வர்ணம் பூசப்பட்டு 3, 5, 7, 9, 11, 13 ஆகிய முகம் கொண்ட பானைகள் உருவாக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

அதேபோல் முளைப்பாரி ஓடுகள் பெரிய அல்லது சிறிய அளவில் வர்ணம் பூசப்பட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே விரதமிருந்து தொடங்குவதாக பானை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். தயாரிக்கப்படும் 7 முதல் 11 முகம் கொண்ட பானைகள் ரூ.700 முதல் ரூ.800 வரை விற்கப்படுகிறது. மூன்று முகம் கொண்ட பானை ரூ.100-க்கு விற்கப்படுகிறது. இந்த பானைகள் தாயமங்கலம், காரைக்குடி, கொன்னையூர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், சாக்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். அய்யனார் கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக மண் குதிரைகளும், விநாயகர் சதுர்த்தி காலங்களில் விநாயகர் சிலைகளும் தயாரிக்கப்படுகிறது.

Categories

Tech |