சிவகங்கை காரைக்குடியில் சொகுசு காரில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.3 1/2 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வாகன சோதனைக்கு துணை தாசில்தார் மல்லிகார்ஜுன் தலைமை தாங்கியுள்ளார். காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது புதுக்கோட்டையில் இருந்து வந்த சொகுசு காரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். பின் அந்த காரில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ரூ. 3 லட்சத்து 34 ஆயிரத்து 550 பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதுகுறித்து காரில் வந்தவர்களிடம் பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பணத்தைக் காணோம் உரிய ஆவணம் எதுவும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ரூ.3 1/2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.