Categories
மாவட்ட செய்திகள்

காரைக்குடி நகராட்சி எடுத்த நூதன திட்டம் – வரி செலுத்தாதவர்களின் வீட்டின் முன் குப்பை தொட்டி!

வரி நிலுவை வைத்துள்ள குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்கள் முன்பாக குப்பைதொட்டி வைக்கும் நூதன திட்டத்தை காரைக்குடி நகராட்சி முன்னெடுத்து வருகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் மற்றும் சொத்துவரி செலுத்தாத அலுவலகங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு முன் குப்பைத்தொட்டிகளை வைத்து உரிமையாளருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நூதன திட்டம் செயல்பட்டு வருகிறது. காரைக்குடி நகராட்சி அரசு அலுவலகம், தனியார் கட்டிடங்கள், பள்ளிகள், மற்றும் வீடுகள் என சுமார் 5 கோடிக்கு வரிப்பணம் செலுத்தாமல் உள்ளது.

இந்நிலையில் காரைக்குடி நகராட்சி வங்கி மற்றும் வீடுகள் என வரி நிலுவையில் உள்ள வீட்டின் முன்பகுதில் நகராட்சி ஊழியர்களால் குப்பைத்தொட்டிகளை வைத்து நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வரியை வசூலிக்கக் காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ஐ.சி.ஐ.சி வங்கி, மத்திய அரசு பி.எஸ்.என்.எல் அலுவலகம், அடுக்குமாடி குடியிருப்பு, தனியார் பள்ளி என வரி நிலுவை தொகையை வசூலிப்பதற்காக கேட் முன்பு குப்பை தொட்டியை நகராட்சி ஊழியர்கள் வைத்து அதில் குப்பையை கொட்டி சென்றனர்.

Categories

Tech |