Categories
தேசிய செய்திகள்

“காரைப் பார்த்து சாலை ஓரங்களில் உள்ள நாய்கள் குறைக்கும்”…. மத்திய இணை மந்திரி பரபரப்பு பேச்சு….!!!!!’

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள லகிம்பூர்கேரி பகுதியில் சென்ற வருடம் அக்டோபர் 3ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பா.ஜ.க-வினர் சென்ற கார் மோதி விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து நடைபெற்ற வன்முறையில் 8 பேர் இறந்தனர். இவற்றில் மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதியதன் காரணமாகவே விவசாயிகள் இறந்தனர் என குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து மத்திய இணை மந்திரி அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்று விவசாயிகள் சங்கதலைவர் ராகேஷ் திகாயத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார். அண்மையில் லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் சார்பாக அஜய் மிஸ்ராவுக்கு எதிராக 72 மணிநேர போராட்டத்தை நடத்தினார். இந்நிலையில் அஜய் மிஸ்ரா லக்கிம்பூர் கேரியில் தன் ஆதரவாளர்களிடம் பேசிய வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியதாவது “நீங்கள் தன்னுடன் உள்ளதால்தான் ஊடகங்களோ, போலி விவசாயிகளோ, கனடா அல்லது பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதிகளோ என்னை வீழ்த்த முடியாமல் திணறி வருகின்றனர். நாய்கள் குறைத்துக்கொண்டே இருக்கும், யானைகள் அதன் வழியில் சென்று கொண்டே இருக்கும்.

நான் லக்னோவுக்கு காரில் சென்றுகொண்டிருக்கும் போது என் காரைப் பார்த்து சாலை ஓரங்களில் உள்ள நாய்கள் குறைக்கும். அது அவற்றின் இயல்பு ஆகும். இதனால் அதை நான் குறைகூற மாட்டேன். ஆனால் அந்த பழக்கம் நம்மிடம் கிடையாது. காலம் வரும்போது உண்மைகள் அனைத்தும் வெளி வரும். அப்போது நான் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறுவேன். உங்களின் ஆதரவானது எனக்கு நம்பிக்கையை தருகிறது” என்று அவர் கூறியுள்ளார். அத்துடன் ராகேஷ் திகாயத் ஒரு மதிப்பில்லாத நபர் எனவும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ராகேஷ் திகாயத் “அவரது மகன் ஒரு வருடமாக சிறையில் உள்ளதால், அவர் ஆத்திரத்தில் இருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |