ராஜஸ்தானின் பரத்பூரில் உள்ள அகத் திராஹே என்னும் பகுதியில் போலீஸ் கான்ஸ்டபிள் கஜ்ராஜ் என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இரவு 7 மணி அளவில் பா.ஜ.க முன்னாள் முதல்வர் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் தன்னுடைய காரை நடுரோட்டில் நிறுத்தியுள்ளார். இந்நிலையில் கவுர் அமர்ந்திருந்த காரை கான்ஸ்டபிள் கஜ்ராஜ் வேறுஇடத்தில் மாற்றி நிறுத்துமாறு கூறியுள்ளார்.
இதனை கேட்ட கவுர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ் கான்ஸ்டபிளை ஓங்கி அடித்தார். அவருக்கு துணையாக டிரைவர் உட்பட சிலர் இருந்தனர். இந்நிலையில் போலீஸ் கான்ஸ்டபிள் கோட்பாலி காவல் நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் எம்.பி கிருஷ்ணேந்திர கவுர் மீது புகார் அளித்துள்ளார். பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் தவறாக நடந்து கொண்டதாக கவுர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல்துறை கண்காணிப்பாளர் அணில் மீனா கூறியுள்ளார்.