அதிகாலையில் காரை திருடிச் செல்ல முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தார்கள்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில் அருகே வசித்து வருபவர் பாஸ்கரன். இவர் சென்ற 4-ஆம் தேதி தனது வீட்டின் அருகே காரை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுவிட்டார். அதிகாலை 3:30 மணி அளவில் கார் இன்ஜினை இயக்கும் சத்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த பொழுது அங்கே மர்ம நபர் ஒருவர் காரை திருடிச் செல்வது தெரியவந்ததையடுத்து உடனே சத்தம் போட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து காரை திருடிச் சென்றவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்கள். இதையடுத்து போலீஸார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் வெள்ளக்கோவில் குட்டகாட்டுப்புதூரில் வசித்து வரும் 22 வயதுடைய கோகுல் என்பது தெரிய வந்ததையடுத்து கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தார்கள்.