கார் ஓட்டுநர் ஒருவர், போக்குவரத்து காவலரை காரில் இழுத்துச்சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் காரை ஒட்டி வந்த நபர் ஒருவர் போக்குவரத்து விதியை மீறியுள்ளார். இதனால் அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் ஒருவர் காரை நிறுத்துமாறு கையை காட்டியுள்ளார். ஆனால் அந்த நபர் காரை நிறுத்தாமல் செல்ல முற்பட்ட போது போக்குவரத்து காவலர் காரின் முன் சென்றுள்ளார்.
அப்போது காரை ஒட்டிய அந்த நபர்போக்குவரத்து காவலர் மீது காரை ஏற்றி கொஞ்ச தூரம் இழுத்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.