Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காரை வாங்கி வந்த நபர்…. நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை….!!!

கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் தெரு வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த மோரிஸ் உடனடியாக நண்பருடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையில் அருகில் நின்ற மற்றொரு காருக்கும் தீ பரவியது. அந்த காருக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த வடபழனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |