பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில் நாற்று நட்ட பெண்களிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இருக்கும் பாப்பாபட்டியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பொது மக்களிடம் கலந்துரையாடினார்.. அப்போது, பாப்பாபட்டி கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள முதல்வரிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். பாப்பாபட்டி கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றி இருவழிப்பாதை அமைக்கவும் கிராம சபையில் கோரிக்கை வைத்தனர்..
முன்னதாக பாப்பாபட்டி கிராமத்திற்கு செல்லும் வழியில், காரை விட்டு முதல்வர் ஸ்டாலின் இறங்கி கே.நாட்டப்பட்டி கிராமத்தில், வயல் வெளிக்கு சென்று நாற்று நடவு செய்து கொண்டிருந்த விவசாயப் பெண்களிடம் நலம் விசாரித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
அப்போது விவசாய பெண்கள் வாழ்வாதாரத்துக்கே வழியில்ல.. எந்த லோனுமே எங்களுக்கு கிடைச்சதே இல்ல.. என்று முதல்வரிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.. பின்னர் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்..